கன்னியாகுமரி : கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. சுமித் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் அவர் சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் முக்கியத்துவம், போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடப்பதன் தேவையை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்து விளக்கி, பாதுகாப்பான சாலைப் பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சாலை பாதுகாப்பு மற்றும் பொறுப்பான குடிமக்களாக செயல்படுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.




















