திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் கோட்டாவூர் துவங்கி, பேரம்பட்டு வரை அணிவகுப்பு நடைபெற்றது. இக்கொடி அணிவகுப்பில் துணை ராணுவப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து, சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.




















