மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை மாநகரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மாநகர காவல்துறையினர் மற்றும் குஜராத் மாநில ஆயுதப்படை (GSAP) காவல்துறையினர் இணைந்து S.S. காலனி மற்றும் அண்ணாநகர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பின் மூலம் தேர்தல் கால பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பேணல் மற்றும் சுதந்திரமான வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




















