மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான இறுதி கட்ட சுழற்சி முறை (Randomization) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21.04.2026) நடைபெற்றது. இந்த நிகழ்வு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் நுண் பார்வையாளர்கள் (Micro Observer), வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் நிலை-1, நிலை-2, நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித், இ.கா.ப., அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பி.கே. அரவிந்த், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் பணிகள் சீராகவும், வெளிப்படையாகவும் நடைபெற இந்த சுழற்சி முறை முக்கிய பங்காற்றுகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















