மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகர ஆயுதப்படை மைதானத்தில்,தேர்தல் களப்பணியாற்றவிருக்கும் மாநகர காவல்துறையினர் , மாநகர ஊர்க்காவல் படையினர் மற்றும் கர்நாடக மாநில ஊர்க்காவல்படையினர் , முன்னாள் காவல்துறை &இராணுவ வீரர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கியதுடன், தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படவிருக்கும் அரசு மற்றும் தனியார் வாகனங்களையும் பார்வையிட்டு சோதனை நடத்தினார் . மாநகர காவல் துணை ஆணையர்கள் உடனிருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















