மதுரை: மதுரை மாவட்டத்தில் பாலியல் குற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேரை, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம் (Tamil Nadu Act 14) கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்புக் காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட POCSO வழக்கில் தொடர்புடைய பாண்டியன் (எ) துரைப்பாண்டி (56). ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், பாலியல் குற்றவாளியாகக் கருதப்பட்டு தமிழ்நாடு சட்டம் 14-ன் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதேபோல், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சதீஷ்குமார் (41). சுசீந்திரன் (49). மற்றும் பாண்டு (எ) பாண்டி (31). ஆகியோர் போதைப்பொருள் குற்றவாளிகளாக வகைப்படுத்தப்பட்டு தமிழ்நாடு சட்டம் 14-ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நால்வரையும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், (17.06.2026) அன்று தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















