மதுரை: மதுரை விமான நிலைய இயக்குநருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மின்னஞ்சலில், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















