புதுக்கோட்டை: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணன் சுந்தர் இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையிலும் 06.11.2021ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களான புதுக்கோட்டை,
அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், பொன்னமராவதி மற்றும் கோட்டைப் பட்டிணம் காவல் ஆளினர்களுக்கும் மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கும் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று வாராந்திர கவாத்து பயிற்சியில் கலவர கூட்டத்தின்போது காவலர்கள் எந்தவிதமான சூழ்நிலையை கையாளவேண்டும் என்றும் கலவரத்தின் போது கலவர கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக Mobe operation பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவர்கள் கலந்து கொண்டு அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் இப்பயிற்சியில் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.















