செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த பிரச்சினையை அறிந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ரம்யா தேவன், நேரடியாக வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, குடிநீர் விநியோகம் சீராக நடைபெற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தார்.
இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு நீங்கியதால், திம்மாவரம் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்களின் தேவையை உணர்ந்து விரைந்து செயல்பட்ட வார்டு உறுப்பினர் ரம்யா தேவனுக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை, உள்ளாட்சி நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




















