திண்டுக்கல் : சத்தியமங்கலத்தை சேர்ந்த மில் அதிபர் துரை(49). இவர் கடந்த 3-ம் தேதி திண்டுக்கல், ரெட்டியபட்டி மில்லுக்கு சென்று கொண்டிருந்தபோது பெரியகோட்டை ரோடு புதிய பாலம் அருகே காரை நிறுத்தி சிறுநீர் கழித்து கொண்டிருந்த போதுஇருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துரையை தாக்கி 4 பவுன் செயின் மோதிரம், ரூ.12,000 பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பில்லம நாயக்கன்பட்டி சேர்ந்த திருப்பதி(22). மணிகண்டன்(22). திலீபன்(20). மற்றும் (18). வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















