திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்ட போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர் . மேற்படி நபர்கள் வைத்திருந்த ரூ.2,44,150/- மற்றும் 160 லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு சட்டவிரோதமான செயலில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள். சட்டவிரோத செயலான லாட்டரி, கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.




















