மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை மாநகருக்கு வருகை புரிந்த மத்திய ரிசர்வ் காவல்படை கூடுதல் இயக்குநர் திரு. ரவிதீப் சிங் சகி, இ.கா.ப., அவர்களுக்கு மாநகர காவல் துறை சார்பில் காவல் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. (17.04.2026) காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித், இ.கா.ப., அவர்கள் அதிகாரியை வரவேற்றார். இந்த வருகையின் போது, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படை உயர் அதிகாரிகள் கலந்துரையாடினர். மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) அவர்களும் உடனிருந்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















