திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட – 1.பில்லா (எ) பாலமுருகன் (41). த/பெ.ராமலிங்கம், மணற்படுகை, தேவதானம், மற்றும் 2. பெலிக்ஸ்ராஜா (33). த/பெ பிச்சைமுத்து, ஆற்றங்கரை தெரு, பாடிமர், முத்துப்பேட்டை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த – 1. பூரா மணிகண்டன் (எ) மணிகண்டன், த/பெ.பழனிவேல், செங்கமேட்டு தெரு, பல்லாங்கோவில் மற்றும் மன்னார்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த நபர் 1. திருமேனி (எ) ராம்குமார் (39). த/பெ.நாகேஸ்வரன், விழால்கார தெரு, மன்னார்குடி, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் திரு.பிரபாகரன், மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் திரு.ராஜ் கமல், திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் திருமதி. வேம்பரசி ஆகிய காவல்நிலையை ஆய்வாளர்கள் மேற்கண்ட குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை பெற்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி நேற்று (18.05.2026) திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.



















