மதுரை: மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் (12.06.2026) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், இ.கா.ப., அவர்களின் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு, குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றுவதற்கும், குழந்தைகளின் கல்வி மற்றும் நலனை பாதுகாப்பதற்கும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின் போது குழந்தை தொழிலாளர் ஒழிப்பின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















