மதுரை: மதுரை மாவட்டம் சாப்டூர் காவல் நிலைய பகுதியில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த நிஷாந்த் 26 த/பெ. செல்வம் கம்மாளப்பட்டி என்ற நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அவரிடம் இருந்து 300 போதை மாத்திரைகள் மற்றும் 34 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.. இது போன்று சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்



















