பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.கி.பிரபாகர் இ.கா.ப அவர்களின் தலைமையில் (09.05.2026) -ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, மற்றும் கவாத்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.
மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார்கள். இந்த கவாத்து பயிற்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலமுருகன்,(மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.*




















