திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அவசர காலங்களில் காவல்துறையை அணுகுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















