திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆம்பூர் உட்கோட்டத்தில் (வடபுதுப்பட்டு, நரியம்பட்டு) சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பு நடை ரோந்து மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுடன் காவல்துறையினரின் நல்லுறவை மேம்படுத்தவும், குற்றத் தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கிராம விழிப்புணர்வு குழு (Village Vigilance Committee) கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இக்கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.




















