திண்டுக்கல்: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு ஒரு எல்லை பாதுகாப்பு படை மற்றும் மூன்று பிற மாநில ஆயுதப்படையினர் சுமார் 400 வீரர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் உள்ள பழனி மகாலில் எஸ்.பி.பிரதீப் தலைமையில் தேர்தல் பணியின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலையில் திண்டுக்கல்லில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளான பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், நிலக்கோட்டை ஆகிய பதட்டமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் மூலம் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.




















