திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் 1,440 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




















