தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் வேடசந்தூர் போலீசார் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர். வேடசந்தூர் நகரில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடத்தினர். இதில் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர், கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் இணைந்து ஆர்.எச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வோம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















