மதுரை: நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடைபெறவும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், இன்று (15.04.2026) மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) திரு. பிரபாகர் அவர்கள், மாநகர ஊர்க்காவல்படை வீரர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கினார். இந்த பயிற்சி, தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை திறம்பட மேற்கொள்ள உதவியாக அமையும்.




















