மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் திரு. சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும், மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித், இ.கா.ப., மற்றும் தென்மண்டல காவல்துறைத் தலைவர் திரு. விஜயேந்திர பிதாரி, இ.கா.ப., அவர்கள் முன்னிலையிலும் தேர்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர்கள், மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது மற்றும் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பேணுவது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















