தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் (04.06.2026) இன்ற மாவட்ட காவல்துறையினர் தேனி நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், குற்றச் செயல்களைத் தடுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடை ரோந்து பணியின் மூலம் திருட்டு, வழிப்பறி, சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




















