தேனி: தேனி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை வைத்து வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்த நபர் மீது தேனி மாவட்ட காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து தேனி காவல் நிலையத்தில் குற்ற எண் 332/2026-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். மேலும், மதுபான விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.



















