மதுரை: மதுரை மாவட்டம். கூத்தியார்குண்டு அருகே 20.10.2019-ம் தேதியன்று தேனியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், மற்றும் அவரது மனைவி சாருபா ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் மதுரை அருகே பயணித்தபோது வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வெங்கடேஸ்வரன் பத்திரமாக வெளிவந்த நிலையில் அவரது மனைவி வாகனத்தின் உள்ளே உள்ளே மாட்டிக் கொண்டார். இதனை கண்டதும் அங்கு பணியில் இருந்த தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து தலைமை காவலர் திரு.ஜெயராமன் அவர்கள், தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த ஆம்னி வாகனத்தில் மாட்டிக் கொண்ட பெண்ணை, துரிதமாக செயல்பட்டு தன் உயிரையும் துச்சமாக நினைத்து பத்திரமாக மீட்டார். தலைமைக் காவலரின் இச்செயலை கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை


















