திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி புனித அந்தோணியார் – மதலமேரி கோயில் திருவிழா மின் தேர் பவனி கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன இதில் எதிர்பாராத விதமாக வெடித்த பட்டாசிலிருந்து பரந்த தீப்பொறி பட்டாசுகள் குவியலாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்தது இதனால் மொத்த பட்டாசுகள் வெடித்து சிதறின இதில் 15 பேர் காயமடைந்தனர். மேலும் சிகிச்சையில் இருந்த ராபின் அருள்ராஜ், பரத்கிருஷ்ணா ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து
வக்கம்பட்டியை சேர்ந்த தக்காளிசேசு(58), ஆரோக்கியராஜ்(66). அபேல்ராஜ்(56). மெர்லின்(27). ஆகிய 4 பேரை கைது செய்தனர் மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















