தூத்துக்குடி: கடந்த 2020ஆம் ஆண்டு புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் குடோனில் நடைபெற்ற திருட்டு வழக்கில், மூன்று பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன், அந்தோணி ராஜ் ஆகியோர் குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூ.2,50,000 மதிப்புள்ள 85 பட்டாணி பருப்பு மூட்டைகளை திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மதிப்பிற்குரிய நீதிபதி திரு. பாக்கியராஜ் அவர்கள் குற்றவாளிகளை தண்டித்து, ஷட்டரை உடைத்ததற்கும் திருட்டிற்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் வீதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.




















