திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று (02.06.2026) வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள்பேட்டை பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. தம்பிதுரை மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அவ்வழியாக வந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (27). மற்றும் மற்றொருவரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், அவர்கள் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்பது தெரிய வந்தது. மேலும், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இருசக்கர வாகனங்களை திருடியதும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இருவர்மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சிறப்பான பணியை மேற்கொண்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.




















