திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 42 வழக்குகளில் 177.326 கிலோ கிராம் கஞ்சாவும், தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 18 வழக்குகளில் 648.085 கிலோ கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட மொத்தம் 825.411 கிலோ கிராம் கஞ்சாவினை இன்று 26-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா பெருமாள்புரத்தில் அமைந்துள்ள Aseptic Systems Bio Medical Wastage
Management நிறுவனத்தில் அரசு வழிகாட்டு விதிகளின்படி திண்டுக்கல் சரக DIG.சசிமோகன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பிரதீப் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















