திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப் அவர்கள் (30.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, காவலர்களின் அணிவகுப்பு ஒழுங்கு, உடற்தகுதி மற்றும் பயிற்சி செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறையினரின் பணித்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், காவலர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் உடற்தகுதியை பேணுவதன் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் என வலியுறுத்தி, தங்களது பணிகளை அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் மேற்கொள்ளுமாறு ஆலோசனைகள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















