திண்டுக்கல்: திண்டுக்கல், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்சை மர்ம நபர் திருடி சென்றார். நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆம்புலன்ஸ் திருச்சி ரோட்டில் செல்வது தெரிய வந்ததை தொடர்ந்து வடமதுரை நெடுஞ்சாலைத்துறை போலீசாருக்கும், பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருடி சென்ற ஆம்புலன்ஸ் பொன்னம்பலம்பட்டி சுங்கசாவடிக்கு வாலிபர் ஓட்டி வந்தார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அந்த வாலிபரை பிடித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் திருடிய நபர் கோபால்பட்டி அருகே மரனூத்து பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி(21). என்றும் இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.



















