மதுரை: சோழவந்தான் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகசந்திரன் பணியாற்றி வந்தார். இவருக்கு ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு மாறுதல் ஆகிவிட்டது. இவருக்கு பதிலாக விக்கிரமங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுப்பையா சோழவந்தான் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சந்திரன் மாற்றப்பட்டதற்கு பிரிவு உபசார விழா நடந்தது. விழாவிற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகர்சாமி, கண்ணன், சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். காவல் நிலைய ஏட்டு ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அனைத்து வியாபாரிகள் நல சங்க செயலாளர் ஆதி, பெருமாள் தனிப் பிரிவு போலீசார் சுந்தர், ராதாகிருஷ்ணன் உட்பட போலீசார் இன்ஸ்பெக்டர் சந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டை தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரன் ஏற்பு உரையாற்றினார். ஏட்டு ராஜேந்திரன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















