திண்டுக்கல்: திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, பாலக்குட்டையை சேர்ந்த முத்துப்பாண்டி(29) இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக மனைவியை பிரிந்து தோட்டனூத்து, மேட்டூர், பழையூரில் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்த நிலையில் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் சார்பு ஆய்வாளர் மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் முத்துப்பாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















