சென்னை : சென்னை தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை (28.07.2022) அன்று தமுமுக-மமக தலைவர்சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்களும், உறுப்பினர் டாக்டர் திரு.எம். இருதயம் அவர்களும் நேரில் சந்தித்து சிறுபான்மையினர் நலப்பள்ளிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்
அவர்களின் கோரிக்கைகளை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வி துறை அமைச்சர் உறுதியளித்தார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி.காகர்லா உஷா இ.ஆ.ப அவர்களும், ஆணையர் திரு.நந்தகுமார் இ.ஆ.ப அவர்களும் உடனிருந்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்





















