திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ஜெயக்குமார் (2011 பேட்ஜ்), பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சூச்சநேரி சந்திப்பு அருகே உள்ள பேருந்து நிறுத்த கட்டிடத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையினரிடையிலும், பொதுமக்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















