திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அப்பகுதியில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த நபர் மீது இருசக்கர வாகன மோதி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















