தேனி : தேனி மாவட்டத்தில், சமூக வலைதளத்தில் கூர்மையான ஆயுதத்தைக் கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட நபரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K.S. பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், இதுபோன்று ஆயுதங்களுடன் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வெளியிடுவோரைக் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.




















