திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி S.P.தனிப்படையினர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சித்தரேவு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக்(35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 150 லாட்டரி சீட்டுகள், ரூ.3,500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















