சேலம் : சேலம் அஸ்வதி வேணுகோபால் (32), டாக்டர் திரு அருண் பாலாஜி 3/125 VIP நகர் ஜெய் ஆஞ்சநேயர் பிளாட் அரியானூர் என்பவரின் கணவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருவதாகவும் கடந்த (13/1/2023), ஆம் தேதி இரவு சுமார் பத்து முப்பது மணி அளவில் தனது கணவர் பணிக்கு சென்று விட்டதாகவும் தானும் தனது மகன்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வீட்டின் தாய்ப்பாலை உடைத்து வீட்டின் உள்ள நுழைந்து கட்டையை காட்டுமிரட்டி கழுத்தில் இருந்து சுமார் 7 பவுன் தாலிக்கொடி மற்றும் பீரோவில் இருந்து ஆறு கிராம் தோடு ஆகியவற்றை படித்துச் சென்றதாகவும் அன்று இரவு வழக்கறிஞர் திரு.எனோட சேவியர் (39) VIP நகர் அரியானூர் என்பவர் தனது குடும்பத்துடன் தனது விவசாய நிலத்தை பார்க்க கொளத்தூர் சென்ற நிலையில் வீட்டின் பின்பக்க பூட்டி உடைந்து உள்ளே சென்று வீட்டில் இருந்த மூன்று சவரன் பிரேஸ்லெட் மற்றும் இரண்டு சவரன் மோதிரம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாகவும் கொடுத்த புகார்களின் பெயரில் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி இரு வழக்குகள் சம்பந்தமாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லை வேலநத்தம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ரேணு (46) மயிலாடும்பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் என்பவரை கைது செய்து களவு போன பொருட்கள் அனைத்தும் குற்றவாளி இடம் இருந்து மீட்கப்பட்டது மேலும் இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு குற்றவாளிகள் அரவிந்த் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் சிறையில் இருப்பதாகவும் வினோத் என்பவர் தலைமறைவாக உள்ளார் மேற்படி வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த திருமதி.தையல்நாயகி காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.அம்சவல்லி காவல் ஆய்வாளர் மற்றும் தனி படையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜாபர்



















