மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் செயல்பட்டு வரும் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) முயற்சியின் பலனாக, நீண்டநாள் நிலுவையில் இருந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊமச்சிகுளம் உட்கோட்டம் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய சசிகுமார், நாகு, முத்துகுமார் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது 6வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் A1, A2, A3 ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், A5 மற்றும் A6 குற்றவாளிகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.21,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கை தொடர்ந்து கண்காணித்து, சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் திரு. சுப்பிரமணியன் மற்றும் நீதிமன்ற தலைமை பெண் காவலர் திரு. சாகுல் அகமது ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.




















