திருவாரூர்: திருவாரூர் மாவட்ட உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்களை கொண்டு இயங்கும் போதை பொருள் தடுப்பு படை போலீசாரின் தொடர் நடவடிக்கையில் நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது குட்கா பொருட்களை கடத்தி வந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, 400 கிலோ குட்கா பொருட்களும் மற்றும் நான்குசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குட்கா கடத்தலில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.சதீஷ் குமார், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.
பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, குட்கா, மது விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வி. சதீஷ் குமார், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.




















