சிவகங்கை: காரைக்குடியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளன்று, கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர். டி. கே.. பிரபு ஆலோசனையின்படி, த வெ க கட்சி சிவகங்கை கிழக்கு மாவட்ட மகளிர் அணிஅமைப்பாளர் தலைவி ஆனந்தி மற்றும் இணை அமைப்பாளர்கள்
பிரியா,முத்துபிரியா பொன்னழகு ராகவப்ரியா, சித்ராதேவி, அலமேலு, தேவி, திவ்யா, நித்யா, ராஜேஸ்வரி ஆகியோர் ஏற்பாட்டில் மதர் சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதர் சிறப்பு பள்ளி நிர்வாக இயக்குனர் அருண்குமார் மற்றும் ஆசிரியர்கள் உள்பட தவெக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















