மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராக பாப்பாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடித்துள்ள இந்த திரைப்படத்தில், பாப்பாபட்டி தேர்தல் சம்பவங்கள் உண்மைக்கு மாறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவும், இயக்குனர் ஹச். வினோத் மற்றும் நடிகர் விஜய் பொதுமன்னிப்பு கோரவும் வலியுறுத்தி, பாப்பாபட்டி, பசுக்காரன்பட்டி, பேயம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடுதோறும் கருப்பு கொடி கட்டியும் போராட்டம் நடத்தினர். படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கோரி மக்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















