அப்போது நெய்வாநத்தம் ஏரிக்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நாகலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் என்பவரின் மகன் விக்னேஷ் (வயது 26), மற்றொருவர் 18 வயதுடைய கல்லூரி மாணவர் ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 410 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்



















