தேனி: தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்தல் மற்றும் காவல் நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்களிடம் மரியாதையுடனும் கனிவுடனும் அணுகுவது தொடர்பாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாக பேணிட அறிவுறுத்தப்பட்டது.




















