திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியில் இருந்து கரட்டுப்பட்டி வழியாக தினமும் லாரிகளில் உடை கற்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் லாரியில் இருந்து விழும் கற்களால் விபத்து ஏற்படுகின்றன. ஆத்திரமடைந்த கரட்டுப்பட்டி பொதுமக்கள் அந்த வழியாக உடை கற்களை ஏற்றி வந்த 5 லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை மாற்று பாதையில் இயக்க அறிவுறுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் சிறை பிடித்து லாரிகளை விடுவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















