திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகே இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்டதாக வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது நதிம் (24). என்பவரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான ஆம்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் குற்றப்பிரிவு குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேற்று (10.10.2026) இச்சம்பவம் தொடர்பாக உரிய வழக்குப் பதிவு செய்து, விசாரணையின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




















