மதுரை: மதுரை மாநகர் E2 மதிச்சியம் காவல் நிலையம், D1 தல்லாகுளம் காவல் நிலையம், திண்டுக்கல் மார்க்கெட், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். திருச்சியை சேர்ந்த தியாகராஜன் (42/26). அருண் சந்தர் (41/26). மற்றும் இஸ்மாயில் (27/26). ஆகியோர் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து திருடப்பட்ட 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




















