தூத்துக்குடி: தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுனில் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. சோனியா மற்றும் போலீசார் (09.04.2026) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த வன்னியராஜன் (52). என்பதும் அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக மேற்படி போலீசார் குற்றவாளி வன்னியராஜன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 2லட்சம் மதிப்புள்ள 45 கிலோ 500 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















